Home இலங்கை அரசியல் கஜ்ஜாவைக் கொல்ல மித்தெனியவுக்கு சென்ற செவ்வந்தி: காட்டிக்கொடுத்த பத்மே!

கஜ்ஜாவைக் கொல்ல மித்தெனியவுக்கு சென்ற செவ்வந்தி: காட்டிக்கொடுத்த பத்மே!

0

“கணேமுல்ல சஞ்சீவ” கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேற்றைய தினம் (14.10.2025) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (15.10.2025) இஷாரா செவ்வந்தி உட்பட கைது செய்யப்பட்ட குழுவினர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் மேலும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கெஹெல்பத்தரை பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக இஷாராவின் கைது விடயத்தை பேசுபொருளாக்கிய எதிர்க்கட்சிகள் தற்போது அமைதி காப்பதும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த விடயங்கள் உள்ளடங்கலாக இஷாரா செவ்வந்தியின் கைதுக்கு பின்னர் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு…….     

https://www.youtube.com/embed/tYwG5YBFyFE

NO COMMENTS

Exit mobile version