Home இலங்கை அரசியல் இராணுவத்தினருக்கு ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த உத்தரவு! பிரித்தானிய தடையின் பின்னணியில் இவர்களா..

இராணுவத்தினருக்கு ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த உத்தரவு! பிரித்தானிய தடையின் பின்னணியில் இவர்களா..

0

இராணுவத்தினர் அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாட்டுக்காகவே யுத்த களத்திற்கு சென்றதாகவும் எவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக யுத்த களத்திற்கு செல்லவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சர்வஜன பலய கட்சியின் காரியாலயத்தில் நேற்று(27.03.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இராணுவப் பிரதானிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை என்பதுடன் அவை நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

தமிழ் இனவாதிகளின் வாக்குகளைப் பெறும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவத்தினர் மீது தடை விதித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர் மீது பிற நாடுகள் தடைகளை விதிக்கும் போது அதனை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும் என நாம் எதிர்பார்த்தோம்.

எனினும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்திக்குரியது.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே பிரித்தானிய அரசாங்கம் இந்த தடையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறுகின்றது.

இதில் இருந்து தமிழ் பிரிவினைவாதிகள் அழுத்தம் அந்நாட்டிற்கு இருப்பது தெரியவருகின்றது” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version