Home இலங்கை ஷாரூக் கான் கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சி! டிக்கெட் விபரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஷாரூக் கான் கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சி! டிக்கெட் விபரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

தென்னாசியாவின் முதல் ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு நகராகக் கருதப்படும் ‘City of Dreams Sri Lanka’ வின் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வில் அழைப்பிதழ் பெற்றவர்களுக்கே மட்டுமே அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வானது 2025 ஒகஸ்ட் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் 

இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிலர் போலியாக விழா டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நேரடி அழைப்பிதழ்கள்

இந்த விழா எங்களின் நேரடி அழைப்பிதழ்கள் வாயிலாக மட்டுமே நடைபெறுகிறது.

எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் டிக்கெட்டுகளை வழங்க அல்லது விற்க அதிகாரம் கிடையாது.

மக்கள் தவறான தகவல்களை நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version