Home விளையாட்டு பிரபல சகலதுறை கிரிக்கெட் வீரருக்கு நீடிக்கப்பட்ட தடை

பிரபல சகலதுறை கிரிக்கெட் வீரருக்கு நீடிக்கப்பட்ட தடை

0

பங்களாதேஷ்(Bangladesh) கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) தனது பந்துவீச்சு நடவடிக்கையை மறுமதிப்பீடு செய்யத் தவறியதால் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

37 வயதான ஷாகிப், கடந்த சீசனில் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக மட்டுமே விளையாடியபோது அவரது பந்துவீச்சு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) போட்டிகளில் பந்துவீசுவதற்கு ஆரம்பத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பந்து வீசுவதற்கான தடை நீடிக்கப்பட்டது

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) பின்னர் வங்காளதேசத்திற்கு வெளியே உள்ள அனைத்து உள்நாட்டு போட்டிகளிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் பந்து வீசுவதற்கான தடை நீடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது.

சிறப்பு துடுப்பாட்ட வீரராக விளையாட தகுதி

கடந்த மாதம் இந்தியாவின்(india) சென்னையில்(chennai) நடத்தப்பட்ட மறு மதிப்பீட்டில் ஷாகிப் தோல்வியடைந்ததாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தடை இருந்தபோதிலும், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பு துடுப்பாட்ட வீரராக விளையாட ஷாகிப் தகுதியுடையவர் ஆவார். 

NO COMMENTS

Exit mobile version