Home முக்கியச் செய்திகள் 24 Hours கார் பந்தயம்: 3ஆம் இடத்தை பிடித்த அஜித் அணி

24 Hours கார் பந்தயம்: 3ஆம் இடத்தை பிடித்த அஜித் அணி

0

துபாயில்(
Dubai) நடைபெற்ற 24H கார் ஓட்டப் பந்தயத்தில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3ஆவது இடம் பிடித்துள்ளது.

24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயம் என்பது 24 மணி நேரம் தொடர்ச்சியாக காரினை ஓட்ட வேண்டும்.

ஒரு அணியில் 3 முதல் 4 ஓட்டுநர்கள் இருப்பார்கள். அவர்கள் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் ஓட்ட வேண்டும்.

கார் பந்தயம்

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் குமார், கடந்த சில மாதங்களாகவே கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின் கார் ரேஸ் பக்கம் திரும்பாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனது கனவை நோக்கி ஓட தொடங்கியுள்ளார்.

இதன்பின் துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி பங்கேற்பது இம்முறை பங்கேற்றது. இந்நிலையில், அஜித் குமாரின் ரேஸிங் அணி மீது ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

நேற்று பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக ஒரேயொரு அணிக்காக மட்டுமே அஜித் குமார் கார் ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

3ஆவது இடம்பிடித்த அஜித் அணி

அந்த வகையில், Porsche GT4 போட்டியில் மட்டுமே அஜித் குமார் ஓட்டுநராக பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் Porsche 911 GT3 Cup (992) 3ஆவது இடத்தை பிடித்ததுடன் மொத்தமாக 568 லேப்கள் ஓட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 26 முறை கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக அஜித் ரேஸிங் அணி 3ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பந்தயத்தில் Razoon ரேஸிங் அணிக்காக அஜித் குமார் கார் ஓட்டினார். அந்த அணி 17ஆவது இடத்தில் பிடித்தது.

நடிகர் அஜித் குமார் அணி 3ஆவது இடத்தை அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில் நடிகர் அஜித் குமார் இந்தியத் தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version