Home இலங்கை அரசியல் கிழக்கில் பாரிய ஊழல் மோசடியில் சிக்கிய சாணக்கியன் : அம்பலமான குற்றச்சாட்டு

கிழக்கில் பாரிய ஊழல் மோசடியில் சிக்கிய சாணக்கியன் : அம்பலமான குற்றச்சாட்டு

0

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட, பட்டிருப்பு தொகுதியின் ஏறிவில் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் இடம்பெற்ற பாரிய மோசடியை தாங்கள் செய்யவில்லை என தைரியம் இருந்தால் மறுக்குமாரு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார் சவால் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபா நிதியில்,  மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தொகுதியின் ஏறுவில் கிராமத்திற்கு மைதானம் அமைப்பதற்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்த பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கோ மற்றும் ஏனைய விளையாட்டு கழகங்களுக்கோ தெரியாமல் திருத்தீவுபிட்டி  என்ற இடத்திற்கு இந்த  நிதி மாற்றப்பட்டு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், அந்த வேலைதிட்டத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடலானது விளையாட்டிற்கு பொருத்தமற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தமையினால் இது பேசு பொருளாக மாறியது.

இதையடுத்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்கைளை பிரதேச விளையாட்டு கழங்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தேட ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து தகவலறியும் சட்டத்தின் ஊடாக நானும் அதை தேட ஆரம்பித்தேன்.

இதன்போதுதான், இதில் தமிழரசுக் கட்சியின் ஏறிவில் கிராமத்தின் வட்டார தலைவரும் மற்றும் செயலாலரும் இந்த மோசடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்தது.

இதனை வெளிப்படுத்தும் முகமாக நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் கணக்கு வழக்குகளை தெரிவிக்குமாரு தெரிவித்த நிலையில், அதிலிருந்து அவர்கள் தப்பித்து ஓடியமை பேசு பொருளாக மாறியதுடன் இதனுடன் தற்போதும் ஒரு மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசடி, சாணக்கியன் குறித்த குற்றச்சாட்டு மற்றும் பலதரப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு

https://www.youtube.com/embed/CEL06ys_Mog

NO COMMENTS

Exit mobile version