Home இலங்கை அரசியல் பிள்ளையான் கட்சிக்கு அநுர தரப்பு ஆதரவு: ஆவேசத்தில் சாணக்கியன்

பிள்ளையான் கட்சிக்கு அநுர தரப்பு ஆதரவு: ஆவேசத்தில் சாணக்கியன்

0

வாகரை பிரதேச சபையின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) உதவியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ்(X) கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வேட்பாளரை ஆதரித்து, தமிழரசுக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து தலைவர் பதவியைப் பெற உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிலையான கொள்கை

இந்த செயற்பாட்டின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எந்தவொரு நிலையான கொள்கைகளும் இல்லை என்பது தெளிவாகியுள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தாக அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலும் சாணக்கியன் அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

NO COMMENTS

Exit mobile version