Home இலங்கை அரசியல் சட்டவிரோத செயற்பாடுகளில் அநுர அரசாங்கம்: சாணக்கியன் விமர்சனம்

சட்டவிரோத செயற்பாடுகளில் அநுர அரசாங்கம்: சாணக்கியன் விமர்சனம்

0

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே
தற்போது தேர்தலில் களமிறங்கி இருக்கிறார்கள் என இங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமற் உறுப்பினர்
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

மட்டக்ளப்பு – காக்காச்சுவட்டைக்
கிராடத்தில் நேற்று (30.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்
கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே
தற்போது தேர்தலில் களமிறங்கி இருக்கிறார்கள்.

துண்டு பிரசுரங்கள் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இங்கு வந்து எமது மக்களின் பிரச்சினைகளை பார்க்கப்போவது அல்ல எமது
மக்களுடைய பிரச்சினைகள் எமக்குதான் தெரியும் யானையினால் ஒருவர்
பாதிக்கப்பட்டால் உடனே அந்த இடத்தின் நிற்பவர்கள் நாங்கள்தான்.

இது ஒரு புறம் இருக்க படகு சின்னத்திலே போட்டியிடுகின்றவர்கள், அவர்களுடைய
கட்சியின் தலைவருடைய புகைப்படத்தை பிரசுரிக்காமல் துண்டு பிரசுரங்களை
வெளியிட்டு இருக்கின்றார்கள்.

எவராவது தமது கட்சியின் தலைவரின் புகைப்படத்தை
பிரசுரிக்காமல் பிரசுரங்களை விநியோகிப்பார்களா? அவர்களுக்கே புரிந்து விட்டது
அவர்களுடைய கட்சித் தலைவரின் படத்தை இட்டு பிரசுரங்களை விநியோகித்தால்
அவர்களுக்குக் கிடைக்கும் வாக்கும் இல்லாமல் போய்விடும் என்று” என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version