மாரடைப்பு காரணமாகவே புனித பாப்பரசர்(Pope Francis) உயிரிழந்ததாக வத்திக்கான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வத்திக்கானில் ஈஸ்டர் கொண்டாட கூடியிருந்த 35,000 மக்களை ஆசீர்வதிக்கும் வகையில் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கிய பல்கனியில், பாப்பரசர் எதிர்பாராத விதமாகத் தோன்றி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் அவரது மறைவு தொடர்பான அறிவிப்பு உலகில் வாழும் கிறிஸ்தவ மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
திருத்தந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்
திருத்தந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய, கர்தினால் மன்றம் இன்று (ஏப்ரல் 22) வத்திக்கான் நகரில் உள்ள சினோட் மண்டபத்தில் கூடவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் அப்போஸ்தலிக்க மாளிகையின் மூன்றாவது மாடியில் அமைந்த திருத்தந்தையின் மாளிகை மற்றும் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டாவின் இரண்டாவது மாடியில் உள்ள மாளிகை, பாரம்பரியப்படி முத்திரையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
திருத்தந்தையின் மறைவை அடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரல், வத்திக்கானின் இடைக்கால பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருத்தந்தையின் மறைவை அடுத்து, உலகம் முழுவதும் பல நாடுகள் துக்க காலத்தை அறிவித்துள்ளன.
https://www.youtube.com/embed/s_JrkAHcvjMhttps://www.youtube.com/embed/aXT2VTNgcQY
