ஷானி அபேசேகர ஒரு சிறந்த அரச அதிகாரி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (18) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஷானி அபேசேகர பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். ஷானி சிறந்த அரச அதிகாரி.
மரண தண்டனை
அவரது விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்றம் பலருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
கடுமையான தண்டனையளித்துள்ளது. ஆகவே இவ்வாறு திறமையான அரச அதிகாரியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளம் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தமது பக்கம் விசாரணைகள் திரும்பும் போது குற்றவாளிகள் ஷானி அபேசேகரவை விமர்சிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
