ஷங்கர்
பிரம்மாண்டத்தின் பிரமாண்டம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எந்திரன்.
அதுவும் யாரும் முயற்சி செய்திராத பிரம்மாண்டமான ரோபோட் திரைப்படத்தை, அனைவரைக்கும் பிடிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து எடுத்திருந்தார் ஷங்கர். இப்படம் அப்போதே ரூ. 290 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ராணவ் மற்றும் மஞ்சரி மொத்தமாக வாங்கிய சம்பளம்… இத்தனை லட்சமா?
Avengers
உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று Avengers. இந்த Avengers திரைப்படங்களில் ஒன்று Avengers: Age of Ultron. இதில் Ultron என்பது தான் கதையின் வில்லனாக வரும் என்பதை நாம் அறிவோம்.
இந்த Ultron கதாபாத்திரத்தை வைத்து வரும் ஒரு காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததே எந்திரன் படத்தில் வரும் ரோபோட் தான் என Avengers: Infinity War படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ ரூஸ்ஸோ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால், அந்த காட்சி Avengers: Age of Ultron படத்தில் இடம்பெறவில்லையாம்.
ஹாலிவுட்வை அனைவரும் வியந்து பார்த்துக்கொண்டிருந்த நிலையில், ஹாலிவுட்வையே தமிழ் சினிமாவை பார்க்க வைத்துள்ளார் ஷங்கர் என, இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.