ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் கடந்த ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆனது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் தற்போது 300 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது.
விமர்சனங்கள் பற்றி ஷங்கர்
இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு வரும் விமர்சனங்கள் பற்றி ஷங்கரிடம் சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
Youtube விமர்சனங்கள் பற்றி பதில் அளித்த அவர் “Youtubeல் வரும் விமர்சனங்களை நான் பார்ப்பது இல்லை. அதுவாக காதுக்கு வருவது தான். நான் கேள்விப்பட்டவரை கேம் சேஞ்சருக்கு நல்ல விமர்சனங்கள் தான் வருகிறது” என கூறி இருக்கிறார்.