ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் க்ளீன் சிறீலங்கா திட்டத்திற்கு பொதுமக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அநுரவின் சிறந்த திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் க்ளீன் சிறீலங்கா செயற்திட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒரு வாரத்துக்கு மாத்திரம் வீதியைத் துப்புரவு செய்வதால் நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினால் இலக்கை அடைய முடியும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் சிறந்தது. அரசியல் நோக்கத்துக்கு இந்த திட்டத்தைச் செயற்படுத்தக் கூடாது.
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியிலிருந்து புதிய மாற்றங்கள் தோற்றம் பெற வேண்டும். சிங்கப்பூர் நாட்டில் க்ளீன் செயற்திட்டம் ஆரம்பமான போது அரசாங்கத்துக்கு அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.