சண்முக பாண்டியன்
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளனர்.
இதில் இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் படைத்தலைவன் படம் வெளிவந்தது. மேலும் இன்று இவர் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கொம்பு சீவி திரைப்படத்திற்காக புரொமோஷன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சண்முக பாண்டியன் தனது உண்மையான பெயர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
முன்பதிவில் மொத்தமாக அவதார் 3 செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
உண்மையான பெயர்
அவர் கூறியதாவது, “என் உண்மையான பெயர் சௌகத் அலி. ராவுத்தர் மாமா மேல் இருந்த அன்பால் எனக்கு இந்த பெயர் வைத்தார்கள். மாமா எவ்வளவு சொல்லியும் அப்பா கேட்கவில்லை. கடைசியாக இந்துவா இருந்து முஸ்லிம் பெயர் வைத்தால் பாஸ்போர்ட்டில் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். அதனால்தான் என் பெயரை சண்முக பாண்டியன் என அப்பா மாற்றினார்” என கூறியுள்ளார்.
