பொது சொத்து சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கின் கீழ் தற்போது தடுப்பு காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சசீந்திர ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, பிணை கோரிக்கை சார்ந்த உண்மைகள் ஒக்டோபர் 2ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று ஒத்திவைத்துள்ளார்.
தடுப்பு காவல் உத்தரவு
சசீந்திர ராஜபக்ச, ஓகஸ்ட் 6ஆம் திகதி சேவனகலையில் மாகாவெலி ஆணையத்திற்குச் சொந்தமான கட்டிடம் மற்றும் சொத்துக்கள் சமீபத்திய மக்கள் போராட்டங்களில் அழிந்தமை தொடர்பாக ரூ. 8.85 மில்லியன் இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான், அவரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன்பின், ஓகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தனது சட்டத்தரணிகள் மூலம், நீதவான் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, பிணை பெற வேண்டும் என்பதற்காக அவர் இம்முறை மறுபரிசீலனை பிணை மனுவை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
