Home இலங்கை சமூகம் ஐ.நா ஆணையாளரின் விஜயத்தின் பின் கிடைத்த அதிர்ச்சி செய்தி

ஐ.நா ஆணையாளரின் விஜயத்தின் பின் கிடைத்த அதிர்ச்சி செய்தி

0

தமிழர்களுக்கு எதிராக அனுமதிக்கப்பட்ட அட்டூழியங்களின் அடையாளமாக மாறியுள்ள செம்மணி மனித புதைகுழி அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பல தசாப்தங்களாக பதில்களைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக, சர்வதேச அளவில் கடுமையான தடயவியல் விசாரணைகளின் அவசியத்தை இந்த செம்மணி புதைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையிலி அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) 2025 ஜூன் 25 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி இடத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது, அவர் “அணையா தீபம்” நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். செம்மணி புதைகுழி, 1990களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது, மேலும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வோல்கர் டர்க்கின் விஜயம் தொடர்பில் அலசி ஆராயும் பொருட்டு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி சமூக செயற்பாட்டாளர் ரஜனி ஜெயபிரகாஸை நேர்காணல் செய்திருந்தது.

இதன்போது அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் காணாமலாக்கப்பட்டோரின் நிலைகள் தொடர்பில் பல முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியிருந்த நிலையில், வோல்கர்  டர்க்கின் செம்மணி விஜயம“ இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வாறான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அராய்கிறது தொடரும் காணொளி…

NO COMMENTS

Exit mobile version