Home இலங்கை அரசியல் சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை நகைப்பிற்குரியதாக மாறிவிடக் கூடாது – சஜித்

சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை நகைப்பிற்குரியதாக மாறிவிடக் கூடாது – சஜித்

0

சர்வதேசத்தின் முன்னணிலையில் இலங்கை நகைப்பிற்குரியதாக மாறிவிடக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உலகத்தின் மாற்றங்களுக்கேற்ப இலங்கையின் கல்விக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

உலக வியாபார மாநாட்டில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய நிகழ்வு தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் நடந்த நிகழ்விலிருந்து எல்லோரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஒருவர் நகைச்சுவையின் பொருளாக மாறக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வு, இலங்கையின் கல்விக் கட்டமைப்பை மாற்றத் தவறியதற்கான விளைவாகவே ஏற்பட்டது,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நான் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அதை ஒரு சிலர் கேலி செய்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இப்போது என் பரிந்துரை எவ்வளவு முக்கியமென அது அனைவருக்கும் தெளிவாகியுள்ளது என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். 

அண்மையில் உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றும் போது அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி சரளமாக ஆங்கில மொழியை பேசத் தவறியதாக எழுந்துள்ள விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு சஜித் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version