Home இலங்கை அரசியல் இஷாராவை இயக்கிய பெண் சட்டத்தரணியின் அதிர வைக்கும் திட்டம்

இஷாராவை இயக்கிய பெண் சட்டத்தரணியின் அதிர வைக்கும் திட்டம்

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கடவத்தையில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடவத்தையைச் சேர்ந்த பெண் தமரா அபேரத்ன சட்டத்தரணி நேற்று முன்தினம் (28) இரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு, 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதனடிப்படையில், கொலைக்காக நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்த இஷாரா செவ்வந்திக்கு, ஒரு வழக்கறிஞராக நடிக்க தேவையான போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை குறித்த பெண் சட்டத்தரணி வழங்கியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி, செவ்வந்தியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது என்றும், அதில் உள்ள கையொப்பம் சந்தேக நபரின் கையொப்பம் என்றும் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதுமட்டுமன்றி இஷாரா செவ்வந்தி, துப்பாக்கியை மறைப்பதற்கு தண்டனை சட்டகோவை நூலின் பிரதியை வழங்கியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞராக மாறுவேடமிட ஒரு டை மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையப் பயன்படுத்தப்படும் வாகன நுழைவு அனுமதி உள்ளிட்ட ஆவணங்களையும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….

NO COMMENTS

Exit mobile version