Home முக்கியச் செய்திகள் பதுளையில் துப்பாக்கிசூடு : கர்ப்பவதி படுகாயம்

பதுளையில் துப்பாக்கிசூடு : கர்ப்பவதி படுகாயம்

0

பதுளை(badulla), ஹிடகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிளின்ட்லாக் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், சுமார் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கர்ப்பவதி படுகாயம்

இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதான பெண் கர்ப்பவதி எனவும், அவரது இடது கையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரின் காரில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டதாகவும், சந்தேகநபரின் காரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பிளின்ட் ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

Source: https://ibctamil.com/article/shooting-at-a-house-in-badulla-pregnant-injured-1725123624?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version