Home முக்கியச் செய்திகள் மினுவாங்கொடையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

0

மினுவாங்கொடை (Minuwangoda) – பத்தண்டுவன சந்தியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டிற்கு 36 வயதுடைய நபரொருவர் இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி

இந்தநிலையில், துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/mh09uOcs0d4

NO COMMENTS

Exit mobile version