Home முக்கியச் செய்திகள் தலவத்துகொடையில் துப்பாக்கிச் சூடு

தலவத்துகொடையில் துப்பாக்கிச் சூடு

0

தலவத்துகொடவில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு வெளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூடு இன்று காலை (19.07.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வர்த்தகர் ஒருவருக்கும் கலால் அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

வாக்குவாதம் நீடித்ததால், வர்த்தகர் துப்பாக்கியை , கலால் அதிகாரியின் முன் காட்டியுள்ளார்.

இதனையடுத்து கலால் அதிகாரி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அருகிலுள்ள சுவரில் நான்கு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தலங்கம காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்த பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தலங்கம காவல் நிலைய அதிகாரிகள் துப்பாக்கியைக் கைப்பற்றி சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version