Home இலங்கை குற்றம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீதான தாக்குதல் தொடர்பில் தேடப்படும் பொலிஸ் அதிகாரி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீதான தாக்குதல் தொடர்பில் தேடப்படும் பொலிஸ் அதிகாரி

0

Courtesy: Sivaa Mayuri

நடிகராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய உத்திக பிரேமரத்னவின் (Uddika Premaratne) வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மகாநாமவை ( Sanjeeva Mahanama) கைது செய்ய நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரேமரத்னவிடம் வாக்குமூலத்தையும் பொலிஸார் பதிவு செய்யவுள்ளனர்.

இதன்படி புதிய அணுகுமுறையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு 

முன்னதாக இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்

shooting-incident-mp-vehicle-police-officer-wanted

இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி சஞ்சீவ மகாநாம, தனது துப்பாக்கியை மற்றொரு நபரிடம் விமான நிலையத்தில் கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகிய உத்திக பிரேமரட்னவும் கனடாவுக்கு சென்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version