Home இலங்கை அரசியல் 13 ஆவது திருத்தம் வடக்கு-கிழக்குக்கு மாத்திரம் அல்ல! ஜீவன் எடுத்துரைப்பு

13 ஆவது திருத்தம் வடக்கு-கிழக்குக்கு மாத்திரம் அல்ல! ஜீவன் எடுத்துரைப்பு

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்காக மாத்திரம் அல்ல எனவும், அது இலங்கை மக்களுக்குரியதெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார். 

கண்டியில் (Kandy) இன்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வடக்குக்கு பயணம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உறுதியளித்துள்ளார்.

13 ஆவது திருத்தம்

மக்கள் மத்தியில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் உரியது.

13 ஆவது திருத்தம் தொடர்பில் கடந்த ஜுலை மாதம் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிக்கையொன்றை தயாரிக்க கலந்துரையாடலை நடத்தினார்.

ஆனால் இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கவில்லை. எனவே, எதிர்க்கட்சி தலைவரின் கூற்றில் உள்ள உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுகின்றது” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version