Home முக்கியச் செய்திகள் கொழும்பில் பரபரப்பு: பொரளையில் பதிவான துப்பாக்கிச் சூடு

கொழும்பில் பரபரப்பு: பொரளையில் பதிவான துப்பாக்கிச் சூடு

0

கொழும்பு – பொரளை தம்பெக்க வத்த பகுதியில் இன்று (24) மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விசாரணை

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, மேலும் பொரளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version