Home இலங்கை சமூகம் வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து வெளியான தகவல்

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து வெளியான தகவல்

0

வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் வவுனியா தெற்கு வலய செயலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் தற்போதும் பல பாடஙகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆசிரியர் இடமாற்றங்கள்

இதனை ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதுடன் இரண்டு விஞ்ஞான பாட ஆசிரியர்களும் பற்றாக்குறையாக இருக்கின்றது.

அத்துடன் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப பாடத்திற்கு ஏழு ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளது.

முக்கியமான பாடத்துறைகளில் நிலவும் இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையானது மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தற்போது வட மாகாணத்தில் வழகங்கப்படவுள்ள ஆசிரியர் இடமாற்றங்களின் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version