கொழும்பின் புறநகர் பகுதியான வெல்லம்பிட்டி, கிட்டம்பகுவ பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
இன்று அதிகாலையில் மோட்டர் சைக்கிளிலில் வந்த 3 சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் துப்பாக்கியின் தோட்டாக்கள் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
