Home இலங்கை குற்றம் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

0

கொழும்பு, தெஹிவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் கடந்த 18ஆம் திகதி காலை நபர்
ஒருவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்று(25) காலை சுட்டுப்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்
கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள
ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு
செய்ததனர்.

துப்பாக்கிச்சூடு 

அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படை அதிகாரிகளை நோக்கித்
துப்பாக்கிச்சூடு நடத்த பதிலுக்கு விசேட அதிரடிப் படை அதிகாரிகளும்
துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சந்தேகநபர் பின்னர் உயிரிழந்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version