இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது.
இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சி.சிறீதரன்
தெரிவித்தார்.
தேசியப்பட்டியல் உறுப்பினர்
தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் கொறடாவாகவும் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற முதலாவது அமர்வின்
பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய தேவை தற்போது
எழுந்துள்ளதாகவும் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து
பயணிப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்வேன் சிறீதரன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/_0rSahG7aF4