Home சினிமா தமிழை விட்டு தெலுங்கிற்கு சென்றது ஏன்.. ஸ்ருதி ஹாசன் ஓப்பனாக சொன்ன காரணம்

தமிழை விட்டு தெலுங்கிற்கு சென்றது ஏன்.. ஸ்ருதி ஹாசன் ஓப்பனாக சொன்ன காரணம்

0

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் கடந்த சில வருடங்களாகவே படங்கள் நடிக்கவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ரஜினி உடன் கூலி படத்தில் அவர் நடித்து வருகிறார்.

தமிழை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு சென்றது ஏன் என்கிற கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்து இருக்கிறார்.

பிக் பாஸில் இருந்து வந்த மஞ்சரிக்கு அவர் வீட்டில் கிடைத்த வரவேற்பு! என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க

தமிழில் நடிக்காதது ஏன்

“நான் எங்க போனாலும் தமிழ் பொண்ணு தான். சென்னை தான் என் வீடு. தமிழ் சினிமாவில் எனக்கு வரும் கதைகள் பிடிக்கவில்லை.”

“படம் பண்ணனுமே என என்னால் அதில் நடிக்க முடியாது. பண்ணா சூப்பரா பண்ணனும். ஆடியன்ஸுக்கும் அது புடிக்கணும். அப்படி கதை இருந்தால் நான் நடிக்க ரெடி. நான் தமிழில் மீண்டும் நடிக்க தான் ரொம்ப நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு தகுந்த வாய்ப்பு தான் வரவில்லை” என ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version