2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாடுகளை உள்ளடக்கிய தனித்துவமான இணை-புரவலர் முறையில் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக 6 நாடுகள் தற்போது 2030 உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன
போட்டியின் முக்கிய இணை-புரவலர் நாடுகளாக ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ செயல்படுகின்றன.
புரவலர் நாடுகள் என்பதனால், இந்த மூன்று நாடுகளின் அணிகளுக்கும் ஃபிஃபா தானாகவே உலகக் கோப்பைக்கான தகுதியை வழங்கியுள்ளது.
நுற்றாண்டு நினைவு போட்டி
மேலும், 1930-ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதல் ஃபிஃபா உலகக் கோப்பையின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் தலா ஒரு நினைவுப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதையொட்டி, இந்த மூன்று நாடுகளின் அணிகளும் தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.
தென் அமெரிக்காவில் நடைபெறும் இந்த மூன்று சிறப்பு நினைவுப் போட்டிகளுக்குப் பின்னர், உலகக் கோப்பைத் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறும்.
இதன்மூலம், 2030 ஃபிஃபா உலகக் கோப்பை வரலாறு, பாரம்பரியம் மற்றும் பல கண்டங்களை இணைக்கும் புதிய புரவலர் வடிவமைப்பால் சிறப்புப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/qualified-6-teams-for-the-2030-fifa-world-cup-1784549412
