Home விளையாட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்

0

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் சபை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 ரி 20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

 பல்வேறு தரப்பினரும் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

அவுஸ்திரேலியாவில் இருந்து ஓய்வு அறிவிப்பு

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது.

மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று சமநிலையில் முடிந்தது. இந்த போட்டி சமநிலையில் முடிந்த உடன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வினை கட்டியணைத்த கோலி

இந்த நிலையில், பெவிலியனில் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த அஸ்வினை நட்சத்திர வீரர் விராட் கோலி கட்டியணைத்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version