Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற நிதிக் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா

நாடாளுமன்ற நிதிக் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா

0

நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  (Dr. Harsha de Silva) நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் இன்றைய (18) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம் பெற்றுவருகின்றது.

ஹர்ஷ டி சில்வாவின் நியமனத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

குழு உறுப்பினர்களின் பெயர்

அத்துடன் சபாநாயகர் நிதிக்குழுவின் (Parliamentary Committee on Public Finance (COPF) பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளார். 

அந்தவகையில் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேனஇ விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version