Home இலங்கை சமூகம் உடையும் இரணைமடு குளத்தின் பக்கவாட்டு சுவர்.. அவதானமாக இருக்க எச்சரிக்கை

உடையும் இரணைமடு குளத்தின் பக்கவாட்டு சுவர்.. அவதானமாக இருக்க எச்சரிக்கை

0

இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பெருக்கெடுத்து ஓடும் கால்வாயின் வெள்ளத் தடுப்பணை உடைந்ததால், அந்தப் பகுதியில் அதிக ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இரணைமடு என்றுமில்லாத அளவில் நிரம்பியுள்ளது. 14 வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்ற அதேவேளை அதையும் தாண்டி வான்பாய்கிறது.

அத்தோடு துருசு பகுதியின் ஊடாகவும் நீர் வெளியேறுகிறது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நேற்றிரவு 10 மணி முதல் இரணைமடு நீரேந்து பிரதேசங்களில் மழை வீழ்ச்சி குறைவடைந்தமையால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் எனத் தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version