Home முக்கியச் செய்திகள் சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

0

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா(Sigiriya) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

சீகிரியா பாறைக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவில் ஒளிரும் சீகிரியா புகைப்படம்

இந்நிலையில், சீகிரியா பாறைக் கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று அமைச்சகம் கூறியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version