Home இலங்கை சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

0

யாழ்ப்பாணம் – நெல்லியடி(Nelliaddy) பொதுச் சந்தை முன்பதாக போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால்
இன்று(18) காலை கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம்
எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப்போராளிகள் கட்சியின் தலைவர் வே.வேந்தன்
ஆகியோரும் கலந்து கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் அரசியல்வாதிகள்

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்,

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறாதது போன்ற நடவடிக்கைகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்து வைத்துக்கொண்டிருக்கப்படும் வேதனையான விடயம் தான் இன்றும் நடந்துக்கொண்டிருக்கின்றது.

ஆயுதப் புரட்சியை நடத்திய ஜே.வி.பியினருக்கு இரண்டு முறை பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

எனினும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இவ்வாறானதொரு நிலை காணப்படுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version