சிம்பு
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் இதுவே ஆகும். வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
கூட்டத்தின் நடுவே அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்… AK என்ன செய்தார் பாருங்க!
இன்ப செய்தி!
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதில், ” படத்தின் பூஜை வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு 9-ம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
