மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்த இளம் தாய் சிந்துயாவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் (12.08.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சிந்துஜாவின் வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிட்ட தாதிய உத்தியோகஸ்தர் இருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகஸ்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவு
பின்னர் நீதிமன்ற உத்தரவினால், இம்மாதம் 12 திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த வழக்குடன் சம்மந்தப்பட்ட வைத்தியர் முன்னிலையாகாத நிலையில் குறித்த வைத்தியரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதே நேரம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நபருக்கு தலா பத்து இலட்சம் ரூபா சரீரபிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 26 திகதி மீண்டும் குறித்த வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் சிந்துஜாவின் சார்பில் சட்டத்தரணி டெனிஸ்வரன் சமர்பணங்களை மேற்கொண்டதுடன் இறந்த சிந்துஜாவின் தாயும் அவருடைய மகனும் நீதி மன்றத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
