Home உலகம் வெளிநாடொன்றில் அதிரடியாக கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்

வெளிநாடொன்றில் அதிரடியாக கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்

0

சிங்கப்பூர் (Singapore) நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் (Tharman Shanmugaratnam) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்றைய தினம் (15.04.2025) சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் 

சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.

இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version