Home இலங்கை அரசியல் இலங்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள சிங்கப்பூரின் பிரதமர்

இலங்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள சிங்கப்பூரின் பிரதமர்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமைத்துவத்தின் மீது சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஹரினியின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சிங்கப்பூரின் பிரதமர், எழுதிய கடிதத்திலேயே இந்த நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 நவம்பர் 18 அன்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், ஹரினி அமரசூரிய மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளரான 54 வயதான ஹரினி கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளை தம்வசம் கொண்டிருக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு

இந்தநிலையில், நாட்டை வழிநடத்தவும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இலங்கை மக்கள் உங்களுக்கு வலுவான ஆணையை வழங்கியுள்ளனர் என்று ஹரினியிடம், லோரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

“உங்கள் தலைமையின் கீழ், இலங்கை வெற்றிபெறும் மற்றும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றும் வோங் எழுதியுள்ளார்.

“இராஜதந்திர உறவுகளில் 55ஆவது ஆண்டு நிறைவை 2025இல் நெருங்கும் நிலையில், சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயற்பட தாம் விரும்புகிறேன்” என்றும் வோங் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version