Home சினிமா ஆனந்தி அக்கா திருமணத்தில் வந்த புது சிக்கல்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

ஆனந்தி அக்கா திருமணத்தில் வந்த புது சிக்கல்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

0

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தற்போது தனது அக்காவின் திருமணத்தை எப்படியாவது பிரச்சனை இல்லாமல் நடத்திவிட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த ஒரு பெண் வைத்திருந்த நகை காணவில்லை என இரவில் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்த நகை ஆனந்தியின் அண்ணன் தான் திருடி இருப்பான் எனவும் சொல்கின்றனர்.

ஆனந்தியின் அண்ணன் பையைய் சோதனை செய்தபோது அதில் நகை இல்லை, ஆனால் அவரது மனைவி பையை சோதனை செய்தபோது அந்த நகை அவரது பையில் இருப்பது பார்த்து எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.

ஜேஜே பட நடிகை பூஜாவை நினைவிருக்கா.. 44 வயதில் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

அடுத்த வார ப்ரோமோ

ஆனால் அந்த நகை தன் பையில் எப்படி வந்தது என தெரியாது என அவர் கூறுகிறார். அதன் பின் அவமானத்துடன் ஆனந்தியின் அண்ணன் மற்றும் அவர் மனைவி மண்டபத்தில் இருந்து கிளம்பி செல்கின்றனர்.

அதன் பின் மணப்பெண்ணை கடத்திவிட்டதாக வில்லன் போன் செய்கிறான். உன் அக்கா கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் உன் கழுத்தில் நான் தாலி கட்ட வேண்டும் என அவன் சொல்கிறான். இந்த பிரச்சனை ஆனந்தி எப்படி சமாளிப்பார்? அடுத்த வார ப்ரோமோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version