Home இலங்கை பொருளாதாரம் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பலன்: நாட்டுக்கு பில்லியன்களில் வரவிருக்கும் நேரடி முதலீடு

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பலன்: நாட்டுக்கு பில்லியன்களில் வரவிருக்கும் நேரடி முதலீடு

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாாிய முதலீட்டை குறிக்கும் வகையில், இலங்கை மின்சக்தி மற்றும் எாிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில்
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(16) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த இந்த புதிய முதலீடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன் ஹம்பாந்தோட்டையின் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பலப்படுத்தும். அத்துடன், முழு இலங்கை மக்களுக்கும் இதன் பலன் மிக விரைவில் கிடைக்கப்பெறும்.

இந்நிகழ்வில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version