சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சாதாரண கதைக்களமாக தான் சென்றுள்ளது.
அதாவது அண்ணாமலை வேலைக்கு கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக அனுப்பி வைக்கின்றனர். அடுத்து ரோஹினி, தனது மகன் க்ரிஷ் பள்ளியில் அண்ணாமலை வேலை செய்வது தெரிந்ததும் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார்.
பின் அடுத்து மனோஜ், ரோஹினியை அழைத்துக்கொண்டு புதியதாக வாங்க இருக்கும் வீட்டை சுற்றிப்பார்க்க செல்கிறார்.
நாளைய எபிசோட்
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், மீனா தனக்கு இன்று நல்ல லாபம் வந்துள்ளது, உண்டியவில் போடுகிறேன் என்கிறார். அதோடு நான் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறேன் என கூற முத்து முகமே மாறிவிடுகிறது.
ஆனால் மீனா அதனை கவனிக்கவில்லை, லாபம் கிடைத்த சந்தோஷத்தில் உள்ளார். இதோ அந்த புரொமோ,