Home சினிமா மருத்துவமனையில் இருந்து வந்த மனோஜ், மீனா கொடுத்த அதிரடி பதில்.. சிறகடிக்க ஆசை புரொமோ

மருத்துவமனையில் இருந்து வந்த மனோஜ், மீனா கொடுத்த அதிரடி பதில்.. சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிற்கு விபத்து ஏற்படுகிறது.

இதனால் அவருக்கு கண் பார்வை தெரியாமல் போக ஆபரேஷன் நடக்கிறது. மனோஜிற்கு இப்படி ஆனதால் அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

இன்றைய எபிசோடில் ஆபரேஷன் பிறகு மனோஜிற்கு கண் பார்வை நன்றாக தெரிகிறது என்பதை அறிந்ததும் குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்.

புரொமோ

பின் இன்றைய எபிசோட் கடைசியில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகிறது.

அதில், கண் பார்வை சரியாகி வீட்டிற்கு வருகிறார், அவரது மருத்துவ செலவிற்கு ஆன பில்லை முத்து காட்ட மனோஜ், ரோஹினி, விஜயா ஷாக் ஆகிறார்கள்.

விஜயா எப்படி பணத்தை கேட்கிறான் என கேட்க அண்ணாமலை முத்துவிடம் செலவு ஆன பணத்தை கொடுங்கள் என மனோஜிடம் கூறிவிட்டு செல்கிறார்.

அன்று நீங்கள் தள்ளிவிட்டவர்களுக்கு இவர் பணம் கொடுக்காமல் போயிருந்தால் உங்களுக்கு ஆபரேஷனே நடந்திருக்காது என மீனா கோபமாக கூறுகிறார். இதோ புரொமோ,

NO COMMENTS

Exit mobile version