சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து ரோஹினி பற்றிய விஷயங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது மனோஜை ஏமாற்றிய அந்த நபரை தேடும் வேலையில் முத்து மற்றும் மீனா இறங்கியுள்ளனர். இன்னொரு மனோஜ் மற்றும் ரோஹினி பணத்திற்கு என்ன செய்யலாம் என புலம்பி வருகிறார்கள்.
புதிய காரை வாங்கியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் சல்மா.. புகைப்படம் இதோ
இன்னொரு பக்கம் முத்து மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து புது தொழிலை தொடங்க பேசிக்கொள்கின்றனர், மீனாவும் சூப்பர் ஐடியா என வாழ்த்துகிறார்.
புரொமோ
விஜயா, மீனாவிடம் பால் மட்டும் சூடு செய்து கொடுத்துவிட்டு செல் என்கிறார், அதற்கு முத்து இதற்கும் மீனா தான் வரணுமா. பார்லர் அம்மா தான் தோசை சுடுகிறதே அவரை சொல்ல செய்யுங்கள் என்கிறார்.
அதற்கு கோபப்பட்ட விஜயா, ரோஹினி மற்றும் மனோஜிடம் நீங்கள் பணம் தரும் வரை இப்படிதான் நாம் அசிங்கப்படுனும், சீக்கிரம் பணம் தர பாருங்கள் என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.