Home சினிமா ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு...

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

0

சிறகடிக்க ஆசை

இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் எந்த ஒரு பரபரப்பும் இல்லை.

பரசுவின் மகள் திருமணத்தில் ரோஹினியின் மாமாவை அண்ணாமலை குடும்பத்தினர் யாராவது பார்ப்பார்கள் என்று பார்த்தால் இன்றைய எபிசோட் வரை எதுவும் நடக்கவில்லை.

ஆனால் இவர்களின் சந்திப்பு நடப்பது போல புரொமோ காட்டுகிறார்களே தவிர எதுவும் நடக்கவில்லை.

சுவாரஸ்யமான கதைக்களத்திற்கு பதிலாக ஏதேதோ விஷயங்கள் காட்டப்பட்டது.

புரொமோ

இன்றைய எபிசோட் முடிவில் அடுத்த வாரத்திற்கான புரொமோ காட்டப்பட்டது. அதில் ரோஹினியின் மாமாவாக நடித்தவர் அண்ணாமலை வீட்டிற்கு வந்து எல்லா உண்மையையும் கூறுகிறார்.

இதனால் கோபமான விஜயா, ரோஹினி முடியை பிடித்து தரதரவென வெளியே தள்ளுகிறார். ஆனால் இது நிஜமா அல்லது வழக்கம் போல கனவா என்பதை பொறுத்திருந்து காண்போம். 

NO COMMENTS

Exit mobile version