Home சினிமா மனோஜ் நகை வைத்து செய்த தில்லாலங்கடி வேலை முத்துவிற்கு தெரிந்ததா?.. சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பு...

மனோஜ் நகை வைத்து செய்த தில்லாலங்கடி வேலை முத்துவிற்கு தெரிந்ததா?.. சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பு தள போட்டோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை.

தொடரின் கதைக்களம் அவ்வப்போது விறுவிறுப்பாக சென்றாலும் நாயகன்-நாயகி பிரச்சனைகள் மட்டுமே உடனே வெளியே வந்துவிடுகிறது, தில்லாலங்கடி வேலை செய்பவர்கள் அவ்வளவாக சிக்குவதில்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக உள்ளது. 

மனோஜ், மீனா நகையை விற்று தனது கடை பிரச்சனையை முடித்துள்ளார். ஆனால் வீட்டில் முத்து-மீனா நகை கேட்டதற்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் விஜயா-மனோஜ் இருவரும் அவர்களை கேள்வி கேட்கிறார்கள். 

இப்படி பேசுபவர்கள் கண்டிப்பாக வீட்டில் சிக்க வேண்டும் என தான் ரசிகர்கள் பொங்குகிறார்கள்.

தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட வீடு கட்டும் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்… புகைப்படம் இதோ

படப்பிடிப்பு தள போட்டோ

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதாவது மனோஜ் தனது பொருள் மற்றும் பணம் போனது என புகார் கொடுத்த போலீஸுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து முத்து புகைப்படம் எடுத்துள்ளார். 

அந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவ அப்போ மனோஜ் சிக்கினாரா என ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

NO COMMENTS

Exit mobile version