Home சினிமா அநியாயமாக பொய் சொல்லி தப்பித்து மீனா மீது பழியை போடும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ

அநியாயமாக பொய் சொல்லி தப்பித்து மீனா மீது பழியை போடும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, சின்னத்திரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

இன்றைய எபிசோடில் மீனா, ஸ்ருதியிடம் ரோஹினி பற்றி கூறிய விஷயம் அப்படியே ஒவ்வொருவருக்காக சென்று விஜயாவிடமும் சென்றது.

அவர் கோபத்தில் ரோஹினி பிடித்து கோபத்தில் கத்த ரோஹினி வேறொரு நாடகம் போட்டு தப்பித்துவிட்டார்.

அதாவது மனோஜின் முதல் குழந்தை கலைந்துவிட்டது, அதனால் 2வது முறை கர்ப்பமாக தான் மருத்துவமனை சென்றேன் என அநியாயமாக பொய் சொல்லி அழுது எல்லோரையும் நம்ப வைத்துவிட்டார்.

அடுத்து என்ன

எப்படியோ மனோஜின் முதல் குழந்தை தான் கலைந்துவிட்டது என நம்ப வைத்துவிட்டார் ரோஹினி. இப்போது விஜயாவிடம், இந்த வீட்டில் யாராவது ஒருத்தர் எனக்கு பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமே இல்லை என கூற, மீனாவை விஜயா திட்டுகிறார். உடனே ரோஹினி எனக்கு தனியாக போய் விடலாமா என தோன்றுவதாக கூறுகிறார், விஜயாவும் ஷாக் ஆகிறார்.

NO COMMENTS

Exit mobile version