டைட்டில் வின்னர் முத்து
பிக் பாஸ் 8ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக முதலில் நாளில் இருந்தே பார்க்கப்பட்டு வருபவர் முத்துக்குமரன். இவருடைய பேச்சு திறமையை பற்றி அனைவரும் அறிவோம். டாப் 5ல் வந்த இவர், கண்டிப்பாக டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இதுவரை பிக் பாஸ் டைட்டில் வென்ற போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ
இந்த நிலையில், பிக் பாஸ் 8ன் டைட்டில் வின்னராகியுள்ளார் முத்துக்குமரன். இவருடைய வெற்றியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
முத்து சம்பளம்
வெற்றியாளரான முத்துக்குமரனுக்கு கோப்பையுடன் ரூ. 40 லட்சத்தி 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். 100 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்து, பைனலிஸ்ட் ஆகி, கோப்பையை வென்ற முத்துக்குமரன், வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வெற்றியாளர் முத்துக்குமரன் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் என சம்பளம் வாங்கியுள்ளார். ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் என்கிற கணக்கில் 105 நாட்களுக்கு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார்.