Home சினிமா ரோஹினி இந்த விஷயத்திலாவது சிக்குவாரா, மீனா கவனிப்பாரா? சிறகடிக்க ஆசை புரொமோ

ரோஹினி இந்த விஷயத்திலாவது சிக்குவாரா, மீனா கவனிப்பாரா? சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முழுவதும் காமெடி சீன்கள் தான் இருந்தன என்றே கூறலாம்.

மனோஜ் தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், அதற்கு நீங்களும் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் தீச்சட்டி எல்லாம் எடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் என கூறுகிறார்.

இதைக்கேட்டு விஜயா என்னால் முடியவே முடியாது என கூற பின் அவரை பயமுறுத்தும் வகையில் ஒரு விஷயம் நடக்கிறது. அடுத்து கரன்ட் ஷாக் அடித்து விஜயா குடும்பமே முத்து, மீனாவை தவிர அனைவரும் தாக்கப்படுகிறார்கள்.

இப்படி சில கலகலப்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

மாரி சீரியலில் இருந்து வெளியேறினாரா ஆஷிகா படுகோன்… காரணம் இதுதானா?

புரொமோ

எபிசோட் முடிவில் நாளை ஒளிபரப்பாக போகும் எபிசோடின் புரொமோ வெளியானது. அதில், மீனா தனது தெரிந்த அக்காவுடன் கரி வாங்க கரி கடைக்கு வருகிறார்.

அங்கே பார்த்தால் ரோஹினியின் மாமா கரி வெட்டிக்கொண்டு இருக்கிறார், அவர் மீனாவையும் பார்த்து விடுகிறார்.

ஆனால் மீனா அவரை பார்ப்பாரா அல்லது வழக்கம் போல் பார்க்காமல் சென்றுவிடுவாரா என்பதை நாளைய எபிசோடில் காண்போம். 

NO COMMENTS

Exit mobile version