சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே ஒரு பெரிய விருப்பம் உள்ளது.
அதாவது தொடரின் முக்கிய கதாபாத்திரமான முத்து-மீனா இடையே எப்போதும் சண்டை நடக்க கூடாது என்பது தான்.
இன்றைய எபிசோடில் வீட்டில் சமைத்த சாப்பாட்டை மீனா வழியில் மயக்கத்தில் இருந்த பாட்டிக்கு கொடுத்துவிட்டு கடை பிரியாணியை விஜயாவிற்கு கொடுத்த விஷயம் பிரச்சனையாகிறது.
விஜயா யாருக்கோ என் வீட்டில் சமைத்த சாப்பாட்டை கொடுப்பதா என சண்டை போட முத்து, அண்ணாமலை, மீனா செய்தது சரி என வாக்குவாதம் செய்கிறார்கள்.
இன்னொரு பக்கம் மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை பற்றி விஜயாவிடம் கூறி அவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிறார்.
நாளைய புரொமோ
வேட்டையனுக்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் பிரம்மாண்ட படம்.. சர்ச்சை கதை பான் இந்தியா படமாகிறது
மற்றவர்கள் கஷ்டம் என்று கூறினால் உடனே தன் கையில் இருப்பதை கொடுத்து உதவும் மனசு முத்துவிற்கு உள்ளது. அவரது நண்பர் தனது அப்பா-அம்மாவின் 60வது கல்யாணத்தை நடத்த முடியவில்லை என கூறி அழுகிறார்.
முத்து வீட்டிற்கு வந்து வீடு கட்ட சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுக்கலாம் என மீனாவிடம் கேட்க அவர் முடியாது என்கிறார்.
அந்த பணம் நான் சம்பாதித்தது என கூற நானும் சம்பாதித்து போட்டுள்ளேன் என மீனா சண்டை போடுகிறார். இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் அய்யோ முத்து-மீனாவிற்குள் சண்டை வேண்டாம் என கதறி வருகின்றனர்.